Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிச்சை எடுப்பது போல்-இளம் விவசாய சங்கத்தினர் நூதன எதிர்ப்பு

பிச்சை எடுப்பது போல்-இளம் விவசாய சங்கத்தினர் நூதன எதிர்ப்பு

கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டும் தரையில் துணியை விரித்து பிச்சை எடுப்பது போலவும் நூதன முறையில் இளம் விவசாய சங்கத்தினர் போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் , இளம் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாரக்கிணறு அன்சர்வே பிளாக்_ 2 , 1954 ஆம்

ஆண்டு காப்பு வனமாக மாற்றுவதற்கான அறிவிப்பு தமிழக அரசு இதழில் இன்று வரை இறுதி அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், மக்கள் குடியிருப்பு விவசாயம் செய்து வருவதாகவும், 72 வருடங்கள் கடந்தும் இன்று வரை காப்பு வனம் என்ற இறுதி அறிவிப்பு எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மக்கள் குடியிருப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் பகுதியை நீக்கம் செய்து மீதமுள்ள

நிலத்தை வழங்கவும் என்ற முக்கிய கோரிக்கை வலியுறுத்தியும் இப்போராட்டத்தை நடத்தினர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ,

பறிக்காதே பறிக்காதே விவசாயிகளின் உரிமையை பறிக்காதே

வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு
என்று கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளம் விவசாயிகளின் தலைவர் சௌந்தர்ராஜன் ;

பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் நிலத்திற்கான பட்டாவை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல தலைமுறைகளாக அகதிகள் போன்று

வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
தங்கள் சொந்த நிலத்திற்கான பட்டா இல்லாத காரணத்தினால் அரசு உதவிகளை பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் மின்சார இணைப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை பெறுவதில் தடைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வங்கி கடன் மற்றும் விவசாய கடன் போன்ற நிதி வசதிகளை பெற முடியாத நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

வீடு, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முழுமையாக கிடைக்காமல் தவிப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
காப்புவனமாக அறிவிக்கும் இறுதி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட நிலங்களின் நிலை என்பது குறித்தும் முழுமையாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதுவரைக்கும் 10 முதலமைச்சர்களிடம் இது குறித்தான மனு அளித்துள்ளோம், எந்த ஒரு முதலமைச்சரும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போதைய முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக எங்களை அழைத்து பேசுவார் என்றும் , இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார் என்றும் காத்திருக்கிறோம் என்று கூறினார்.

error: Content is protected !!