தெலங்கானா மாநிலம் குமரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ககாஜ் நகர் மண்டலம் பெங்காலி கிராமம் அருகே கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த மோர்லே லட்சுமி (21) என்ற பெண்னை
புலி தாக்கியது. உடனடியாக கிராமத்தினர் வந்ததால் புலி அங்கிருந்து ஓடியது. பின்னர் லட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காகஜ் நகர் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த லட்சுமி குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். லட்சுமியை தாக்கிய புலி அந்த பகுதியிலேயே சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

