Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் 1½ கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது-

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி சோரீஸ்புரம் மாதவன் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததுடன், அவர் கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்தனர். அதில் ஒன்றரை (1½) கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்தக் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாதவன் நகர் 5-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் மோகன் ராம் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மோகன்ராமை கைது செய்த சிப்காட் போலீசார், இந்தக் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link