திருச்சி இபி ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த வரகனேரி சந்தனபுரத்தை சேர்ந்த முகமது யாசர் (26) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள், செல்போன், பணம் ரூ7 ஆயிரத்து 50யை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
