Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை-இலுப்பூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் கிராமத்தில் இயங்கி வரும் தொழிற்சாலை ஆலையில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஆலையில் பயங்கரச் சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரான சூரியகுமார் என்பவர் வெடிவிபத்தின் தாக்கத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த இலுப்பூர் காவல்துறையினர், சூரியகுமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வெடிவிபத்துக்கான முதன்மைக் காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!