சோழிங்கநல்லூரில் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த வருண் பாலாஜி (31) என்பவரிடம், பர்வீன் (24) என்ற இளம்பெண் திருமணம் குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு வருண் பாலாஜி பதிலளிக்காமல் மௌனம் சாதித்ததால் மனமுடைந்த பர்வீன், குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, காதலன் வருண் பாலாஜியைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
