Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் போக்சோவில் கைது-திருச்சி க்ரைம்

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

கத்தியால் தாக்கி வாலிபரிடம் செல்போன் பறிப்பு

திருச்சி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 36). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கணேசபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியமங்கலம் எஸ் ஐ டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சற்று இளைப்பாறிய போது அதே பகுதியை சேர்ந்த அகமது ரியாஸ் கான் வயது 22, 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் அபிமன்னன் சட்டை பையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.இதனை தடுக்க முயன்ற அவரை கத்தியால் தாக்கி விட்டு செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஹமத் ரியாஸ் கானை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

டாஸ்மாக் கடையில் பயங்கர மோதல்….2 வாலிபர்களுக்கு பீர் பாட்டில் குத்து

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 29. இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சிவா 20 என்பவர் உடன் தில்லைநகர் தென்னூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது எதிரே வந்த உறையூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் 50 என்பவர் மீது கார்த்திகேயன் மோதியுள்ளார். இது குறித்து கேட்டபோது கார்த்திகேயன் மற்றும் செல்வகுமார் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் மற்றும் அவருடன் வந்த விஜய், வடிவேல் ஆகிய மூவரும் கார்த்திகேயனை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி கீழே தள்ளி பீர் பாட்டிலால் சிவா மற்றும் கார்த்திகேயனை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் மற்றும் வடிவேல் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

7ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான் வயது 30. இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த மாணவனின் தாய் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது இர்பானை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மனைவியை தாக்கிய கணவன் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி சாலமோன் தெருவை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ஸ்டெல்லா மேரி வயது 37. இந்த தம்பதிகளுக்கு 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். ஸ்டெல்லா மேரி பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மது போதையில் வீட்டிற்கு வந்த கார்த்தி, ஸ்டெல்லா மேரியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி ,கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர்.

வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் கைது

திருச்சி பெரியார் நகர் ஐந்தாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் வயது 55. கொத்தனாரான இவர் ராமாயி என்ற பெண்ணை திருமணம் செய்துஉள்ளார். இவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். அர்ஜுனன் வேலை செய்யும் இடத்தில் ராமாயி காவலாளியாகவும் வீட்டு வேலை செய்தும் வருகிறார். சம்பவத்தன்று ராமாயி வழக்கம் போல் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் தங்க மோதிரத்தை காணவில்லை. இது குறித்து அர்ஜுனன் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கச் செயின் மற்றும் மோதிரத்தை திருடி சென்றஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.

ஓட்டலில் ஏசி காப்பர் வயர் திருட்டு

திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் தினகரன் வயது 23. இவர் மேல சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் உதவி பொது மேலாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் தனது ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஏசியில் காப்பர் ஒயர்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் அவர் இது குறித்து கோட்டை குற்றப் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில், அந்த மர்ம நபர் ஹோட்டலில் இருந்த 13 காப்பர் வயர், அப்பகுதியில் இருந்த இரண்டு வங்கிகள் மற்றும் பாலாஜி என்பவரின் வீட்டில் இருந்த காப்பர் வயரையும் மொத்தம் 21 காப்பர் ஒயர் கை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காப்பர் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!