Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

கரூர் மாவட்டம் மேளாயாண்டிபட்டி பிரிவு அருகே  ஒரு காதல்ஜோடி  டூவீலரில் சென்றது.  காதலனுக்கு 21 வயது இருக்கும். காதலி மைனர்.  இதைப்பார்த்த  பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர்  அந்த வாகனத்தை  நிறுத்தி, காதலனை  ஜாதி பெயரை சொல்லி திட்டி அவரை தாக்கினார்.

மேலும் அந்தப் பெண்ணை நீ மறந்து விட வேண்டும். இல்லை என்றால் உன் காதை அறுத்து ஊறுகாய் போட்டு விடுவேன் என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி அவரை  கடுமையாக தாக்கி அங்கிருந்து அனுப்பி விட்டார். மேலும் அந்த  மைனர் பெண்ணை  தன்னுடைய  பைக்கில்  ஏற்றிக்கொண்டு  அங்கிருந்து சென்று விட்டார். 10 பேர் முன்னிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

இந்த  சம்பவம்  மூன்று மாதத்திற்கு முன் நடந்துள்ளது. இதுபற்றிய வீடியோ இப்போது கரூர் மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.

அதன் பேரில் அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு அன்வரை  கைது செய்து கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தையில் பேசுதல், வாகனத்தை தடுத்து நிறுத்தல், சாதி பெயரை சொல்லி திட்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார், தனது மகனை  கண்டித்தது சரி என்று கூறியதை அடுத்து அன்வரை   ஜாமீனில் விடுவித்தனர்.

அன்வர் மீது ஏற்கனவே, மதுக்கரை, துடியலூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!