Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

திருச்சியல் டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


திருச்சி துறையூர் கண்ணனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம்(வயது 27)கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜம்புநாதபுரம் கோத்தம்பட்டி
பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நாய் திடீரென ரோட்டின் குறுக்கே ஓடியது. இதில் நிலை தடுமாறிய ராஜலிங்கம் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கே கடந்த 3 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் சிகிச்சை பல அளிக்காமல் ராஜலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகா என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


காட்டுப் பகுதியில் மரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் விபரீதம்


திருச்சி துறையூர் டவுன் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்( வயது 31)
இவருக்கு திருமணம் ஆகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும்
உள்ளனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த வாரம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது
இதனால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு ஒக்கரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு
சென்றுவிட்டார். மேலும் கண்ணனின் தந்தையும் அவரிடம் மது குடிப்பதை விட்டு தொலை என கண்டித்ததாக கூறப்படுகிறது இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான கண்ணன் வீட்டிலிருந்து வெளியேறி, துறையூர் குறிஞ்சி மலை வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் லுங்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் பின்னர் இது பற்றி அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!