Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்… புகார் சிக்கிய சிசிடிவி

சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்... புகார் சிக்கிய சிசிடிவி

திருவிடைமருதூர் குமரன் கோவில் வாசல் முன் நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி. இந்த சைக்கிள் திருட்டு தொடர்பாக திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவிடைமருதூர் குமரன் கோவில் வாசலில் இரு தினங்களுக்கு முன் செல்வம் என்பவர் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தனது சைக்கிள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது .

இது தொடர்பாக அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, இளைஞர் ஒருவர் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

இந்த பதிவான காட்சிகளை கொண்டு செல்வம் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரினை பதிவு செய்த திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் இச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை செ வருகின்றனர்.

கடந்து இரண்டு நாட்களில் திருவிடைமருதூர் பகுதிகளில் 2 சைக்கிள்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!