Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்; முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாட்டாமங்கலம் பகுதியில் சாலையோரமாக உள்ள கடையில் ராஜேந்திரன் (70) என்பவர் டீ அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த இருவர் ராஜேந்திரன் முகத்தில் புகையினை விட்டு விட்டு அவரை கோபப்படுத்தினர்.அதனை தட்டிகேட்ட ராஜேந்திரனை குளிர்பான பாட்டிலால் அடித்துவிட்டு தப்பியோடினர். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர்யிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தபோலீசார் தப்பியோடிய மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!