திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்க தலைவராக, அதிமுக, பகுதி செயலர் கலீலுர் ரகுமான் என்பவர் இருந்தார்.  இந்த சங்கத்திற்கு சொந்தமான தில்லைநகர் பேரண்ட் காலனியில் உள்ள, 6,750 சதுர அடி நிலத்தை, மங்கள் அண்ட் மங்கள் பாத்திரக்கடை உரிமையாளர் மூக்கப் பிள்ளையின் உறவினர் விக்னேஸ்வரி என்பவருக்கும், தென்னுார் அண்ணாநகரில் உள்ள, 2,790 சதுர அடி நிலத்தை ஹக்கீம் பிரியாணி கடை உரிமையாளர் ஹக்கீம் என்பவருக்கும் உரிமை மாற்றம் செய்யப்பட்டது. இதில் தில்லை நகரில் சதுர அடிரூ.10ஆயிரத்திற்கு விலைபோகும் நிலையில், இந்த விற்பனையில் குறைந்த விலைக்கு விற்றதால் 10 கோடி ரூபாய் வரை சங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இடத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்து கொடுத்த, கூட்டுறவு சங்க செயலர் வேலாயுதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். . இதையடுத்து தில்லைநகர் கூட்டுறவு சங்கத்தை கலைக்க கூட்டுறவு இணைப்பதிவாளர் பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில் திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தை கலைத்தும் அதற்கு என தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

LEAVE A REPLY