Skip to content
Home » வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும். இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாத்து 50 முதல் 60 நாட்களில் முட்டையிட்டு வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள் அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வரும் 1972 ஆம் ஆண்டு முதல் கோடியக்கரை வேதாரண்யம் பகுதியில் சுமார் 7 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையினர் மூலம் கடலில்

விடப்பட்டுள்ளது. தற்போது நாலுவேதபதி, புஷ்பவனம், பெரியகுத்தகை, ஆகிய கடற்கரைப் பகுதிகளில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலில் உள்ளேயும் வெளியேயும் சேரு நிறைந்துள்ளது. இந்த கடற்கரை பகுதிகளுக்கு முட்டையிட வரும் ஆலிவர் ரெட்லி ஆமையில் சேற்றில் சிக்கி இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன. இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் 10 கிலோ முதல் 15 கிலோ வரை இருக்கிறது இதனை வனத்துறையினர் அப்பகுதியில் கண்டு கொள்ளவில்லை எனவும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் உலக அளவில் அழிந்து வரும் நிலையில் உள்ளதால் அதனைக் காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!