Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்து

பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சாலையை கடக்க முயன்ற பேருந்து மீது திடீரென சரக்கு ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பேருந்து பெரும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சுமார் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!