Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கு என்று புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் . நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளைப் புறக்கணித்து 3ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சந்தனவேல், தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ராகவேந்திர மூர்த்தி பிரவீன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சங்கர் கணேஷ், செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன் உள்பட 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம்), கோட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!