Skip to content
Home » 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர்  வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன்,  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் திருமதி விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   இன்று (29.09.2023) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீளவர் நலத்துறை சார்பில் 56 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் 14 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும்

மாணவியர் விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்,   சட்டத் துறை அமைச்சர்  எஸ். இரகுபதி, மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், தலைமைச் செயலாளர்   சிவ் தாஸ் மீனா,  கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் என். பெலிக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!