Skip to content
Home » புகையிலை பொருட்கள் 101 மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல்… 3 பேர் கைது…

புகையிலை பொருட்கள் 101 மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல்… 3 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் M.கார்த்திகேயன், மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் P.பகலவன் உத்தரவின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்கள், விற்பனை செய்பவர்களை தொடர்ச்சியாக காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தொடர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்அரியலூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அரியலூர் காந்தி மார்க்கெட்டில் உள்ள நியூ ரஹ்மத் மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்த TN 39 CY 3060 என்ற பதிவெண் கொண்ட மினி லாரியை சோதனை செய்தபோது, அதில் 101 மூட்டைகள் அரசால் தடை செய்யப்பட்ட,

சுல்தான் புகையிலை பொருட்கள் சுமார் 1515கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, அவர்கள் கைப்பற்றப்பட்ட புகையிலையை பரிசோதனை செய்து, இது போன்ற புகையிலை பொருட்கள் அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது என்று உறுதியளித்தனர்.

இதனையடுத்து அரசால் தடை செய்யப்பட்ட மேற்படி 101 மூட்டைகள் புகையிலை மற்றும் ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்யப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபட்ட விற்பனையாளர் ஜெயங்கொண்டம் ரெட்டியார் காலனியைச் சேர்ந்த ஸ்டீபன் விவாகர்(38), ஜெயங்கொண்டம் அண்ணாநகரைச் சேர்ந்த ஓட்டுநர் ராம்சூரியா(25), நியூ ரஹ்மத் மளிகை கடை உரிமையாளர் அகமது பஷீர் (26), ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!