Skip to content
Home » அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் வானில் தடுமாற்றம்… பீகாரில் பரபரப்பு..

அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் வானில் தடுமாற்றம்… பீகாரில் பரபரப்பு..

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிறார் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இவர்கள் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பீகாரில் உள்ள பெருய்சராய் பகுதியில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கிளம்புவதற்காக அருகில் உள்ள ஹெலிபேடிற்கு வருகை தந்தார். அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டரில் அவர் ஏறி அமர்ந்ததும் ஹெலிகாப்டர் விமானி அதனை புறப்பாட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியதால் பரபரப்பு
வானில் எழும்ப முயற்சித்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்கும் இலக்கின்றி பறக்கத் துவங்கியது. சில நொடிகள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டரை பின்னர் விமானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதையடுத்து அசம்பாவிதம் எதுவும் இன்றி அமித் ஷா தனது பயணத்தை தொடர்ந்தார்.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!