Skip to content
Home » 10ம் வகுப்பு துணைத்தேர்வு…23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு துணைத்தேர்வு…23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.  இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜுன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் என்றும் துணைத்தேர்வுக்கு வரும் 23-ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!