Skip to content
Home » நாளை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நாளை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டில்  பிளஸ்2 தேர்வு கடந்த வாரம் முடிவடைந்தது.  விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில்  தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  நாளை   காலை தொடங்குகிறது. நாளை மொழித்தேர்வு நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.   ஏப்ரல் 8ம் தேதி தேர்வு முடிகிறது.(தேர்வு விவரம் அட்டவணையில்)மே மாதம்  10ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும்.

பாடம் தேதி
தமிழ் 26-03-2024
ஆங்கிலம் 28-03-2024
கணிதம் 01-04-2024
அறிவியல் 04-04-2024
சமூக அறிவியல் 08-04-2024

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்திற்கு முன்னதாக சென்று விடுங்கள் பதற்றமின்றி தேர்வு எழுதுங்கள்.  பெஸ்ட் ஆப் லக்  என்று அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!