Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேதாரண்யம், கோடியக்கரையில் 1,134 ஆலிவர் கடலில் விடப்பட்ட ரெட்லி ஆமை குஞ்சுகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனத்துறையினர் மூலம் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரித்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து குஞ்சு பொரித்தவுடன் 534 ஆமைகுஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

இதேபோல் வேதாரண்யம் கடற்கரையிலும் 580 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டனநாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் அரிய வகை இனமான ஆலிவர்ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு இது வரை 132ஆலிவர்ரெட்லி ஆமைகள் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை கடற்கரைக்கு வந்து 14,960 முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று உள்ளது.இந்த முட்டைகளை வனத்துறையினர் பாதுகாப்பாக சேகரித்து கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் தனித்தனியாக குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர்.

இது தவிர நாள்தோறும் கடற்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் குழிதோண்டி முட்டை இட்டு செல்வதையும் வனத்துறையினர் எடுத்து முட்டை பொரிப்பகத்தில் பத்திரமாக புதைத்து வைத்துள்ளனர். இந்த 45 முதல் 55 நாட்களுக்குள் குஞ்சு பொறிக்கப்படும்.

அவ்வாறு ஆமை குஞ்சுகள் வெளியான நிலையில் திருச்சி மண்டல வன பாதுகாவலர் காஞ்சனா ஆலோசனையின்பேரில்நேற்றுமுன்தினம் ஆமைகுஞ்சுகளை நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் ராமேஸ்வரன் மற்றும் கோடியக்கரை வனச்சரகர் ஜோசப் டேனியல், வனவர் இளஞ்செழியன், வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன் மற்றும் வனத்துறையினர் கடலில் விட்டனர்.

இதுகுறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர்ஜோசப் டேனியல் கூறும்போது, கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 53 ஆண்டுகளாக ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இதுவரை சுமார் 10 லட்சம் ஆமை குஞ்சுகள் கோடியக்கரையில் கடற்கரையிலிருந்து விடப்பட்டுள்ளன.

இங்கு குஞ்சுகளாக விடப்பட்ட ஆமை குஞ்சுகள் மீண்டும் 25 ஆண்டுகள் கழித்து பருவம் எய்தி திரும்பவும் இதே கடற்கரைக்கு முட்டையிட வருகிறது என ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் இந்த வகையான ஆமைகளை பாதுகாக்க தற்போது வனத்துறையினர் டுஹாங் என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இதில் மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது வலையில் ஆமைகள் சிக்கினால் அதனை எடுத்து கடலில் விடுவதை வீடியோ எடுத்து இந்த செயலில் பதிவிறக்கம் செய்தால் மீனவர்களுக்கு சிறப்பு பரிசு வனத்துறை மூலம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

error: Content is protected !!