சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும், த.வெ.க., வேட்பாளர்களை, சென்னையில் நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். அதில், மாற்று கட்சிகளில் இருந்து வந்த, 106 பேர் இடம் பெற்றுள்ளனர். த.வெ.க., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நேற்று காலை நடந்தது. அதில், தன் கட்சி வேட்பாளர்களை, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்தார். த.வெ.க., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், நேற்று காலை நடந்தது. அதில், தன் கட்சி வேட்பாளர்களை, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்தார்.
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என, இரண்டு தொகுதிகளில், விஜய் போட்டியிட உள்ளார். த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் – தி.நகர், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா – வில்லிவாக்கம், நிர்வாக குழு ஒருங்கிணைப்பாள செங்கோட்டையன் – கோபி செட்டிப்பாளையம், கொள்கை பரப்பு பொதுச் செயலர் அருண்ராஜ் – திருச்செங்கோடு, இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் – திருப்பரங்குன்றம், பொருளாளர் வெங்கட்ரமணன் – மயிலாப்பூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக விஜய் அறிவித்தார்.
அதேபோல, செங்கோட்டையனின் ஆதரவாளர் சத்யபாமா திருப்பூர் வடக்கிலும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த ஜெ.சி.டி.பிரபாகர் ஆயிரம் விளக்கிலும், கு.ப.கிருஷ்ணன் லால்குடியிலும் போட்டியிட உள்ளனர். அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வுக்கு தாவிய வி.எஸ்.பாபு, கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து நிறுத்தப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரச இருந்து நீக்கப்பட்ட டிசெல்வம், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக எடப்பாடியில், அருண்குமார் என்பவரும், த.வெ.க. சார்பில் போட்டியிட உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன், தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.,வில், திருநெல்வேலி தொகுதி கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார். அவர் நேற்று காை தான் த.வெ.க.,வில் இணைந்தார். அவருக்கு திருநெல்வேலி தொகுதியை, விஜய் ஒதுக்கி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க., செயலராக இருந்த தூசி மோகன், ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில், நேற்று காலை த.வெ.க.,வில் இணைந்தார். அவருக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நாராயணனுக்கும், த.வெ.க.,வில் இணைந்த, 48 மணி நேரத்தில், நாங்குநேரியில் போட்டியிட, ‘சீட்’ கிடைத்துள்ளது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் தனபால் மகன், கடந்த மாதம் த.வெ.க.,வில் இணைந்தார். அவருக்கு ராசிபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படி மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த, கட்சியில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத 106 பேரை, வேட்பாளர்களாக விஜய் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், த.வெ.க., மாவட்ட செயலராக உள்ள, 62 பேருக்கு விஜய் வாய்ப்பு அளிக்கவில்லை. தன் கார் டிரைவரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு, விருகம்பாக்கம் தொகுதியை விஜய் ஒதுக்கியுள்ளார்.
