ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம் கே.ஜே.புரம் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்குள் சுமார் 13 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகப் பாம்பு பிடிக்கும் வீரர் வெங்கடேசனுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர், அந்த ராஜ நாகத்தை லாவகமாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆந்திராவில் கட்டடத்திற்குள் புகுந்த 13 அடி ராஜ நாகம் லாவகமாக மீட்பு
