Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

140 கிலோ குட்கா பறிமுதல்- தவெக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

140 கிலோ குட்கா பறிமுதல்- தவெக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்த தினேஷ் செபாஸ்டியன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினரான பெரியசாமி ஆகிய இருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த சுமார் 140 கிலோ எடையுள்ள குட்கா மூட்டைகளை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்கு குட்கா எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!