Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 17 பேர் பலி… பரிதாபம்

நேபாளத்தில் இன்று (பிப்ரவரி 23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டர். இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர்.

ஆறு பெண்கள் மற்றும் பதினொரு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். இவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். பஸ் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளது

error: Content is protected !!