Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்கள் முன்பு சிறுமி மாயமானதையடுத்து சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து விசாரணையில் சிறுமியை கடத்தி

பாலியல் தொல்லை கொடுத்த பாக்கியராஜை பிடித்த குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். பின்னர் குளித்தலை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!