Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள் வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்களின் வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது. வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு சாலை விதிகள்

தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாலை 6 மணிக்கு தங்களின் பெற்றோர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பின்னர் வழக்கு பதிவு செய்து அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாகன சோதனையில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் உலகநாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஈடுப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!