திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(28-01-2025) தொடங்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்று இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அவரை வழியனுப்ப ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலைய பகுதிக்கு வந்து இருந்தனர். அப்போது திருச்சி நவல்பட்டு ஊராட்சி கவுன்சிலர் பாலமுருகன் உள்பட 2 பேர் இருசக்கர வாகனத்தில் விமானநிலையம் வந்து விட்டு, மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கவுன்சிலர் பாலமுருகன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி கவுன்சிலர் உட்பட 2 பேர் படுகாயம்…
- by Authour
