வங்க கடலில் உருவான புயல் மாண்டஸ் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரை கடக்கிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடுங்குளிர்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2லட்சம் மீனர்வள் கடலுக்கு செல்லாமல் முடங்கி உள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக பல பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து மக்கள் துன்புத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படமும் திரைக்கு வந்து வந்துள்ளது. வைகைப்புயலின் படம் 5 வருடத்திற்கு பிறகு இப்போது திரைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி வடிவேலு ரசிகர்களும், நெட்டிசன்களும், ஒரே நாளில் 2 புயலா, தமிழகம் தாங்காது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.