Skip to content
Home » 2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் இரண்டு வாய்க்கால்களின் குறுக்கே புதிதாக இருவழிபாதையாக அகலமாக பேருந்துகள் சென்று வரக்கூடிய வகையில் பாலம் அமைத்து தர வேண்டுமென, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அதனை ஏற்று ரூபாய் 3 கோடி மதிப்பில் இரு கட்டளை வாய்க்கால்களின் குறுக்கே 2021 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு குளித்தலை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் டெண்டர் எடுத்து கடந்த வருடம் பாலம் கட்டுவதற்க்கான பணிகள் துவங்கினர்.

ஆனால் பணிகள் மிகவும் மந்த கதியில் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டு வாய்க்காலில் கடந்த ஆண்டு முடிவடைய வேண்டிய பாலம் கட்டுமான பணியில் இரண்டு வாய்க்காலில் பாலம்

வேலை பாதியிலே நிற்கிறது. மேலும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் பாலம் கட்டுவதற்காக 10 அடி ஆழம் தோண்டப்பட்டு கான்கிரீட் அடிதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றாமல் கான்கிரீட் கொட்டப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டன.

இதனால் கான்கிரீட் கலவை நீரில் கரைந்து வெளியேறியது. இதனால் பாலத்தின் அடித்தளம் வலுவாக அமையாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என கடந்த 6 மாதத்திற்கு முன்பு நீயூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியில் செய்தி வெளியிட்டுருந்தோம். இந்நிலையில் பால வேலை 10 நாட்கள் வேலை செய்வது, 10

நாட்கள் வேலை நிறுத்தி வேறு ஒரு பகுதியில் வேலை செய்வது என பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேதமடைந்த பழைய பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி வாகனம் மற்றும் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் இந்த வழியாக சென்று வருகின்றனர். பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்பை தவிர்க்கும் விதமாக புதிய பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து விரைந்து பாலப்பணிகளை முடித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!