நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 21 தமிழர்கள் மீட்கப்பட்டு, டெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் ஆனந்த், சரத் ஆகியோர் நேரில் வரவேற்றனர். நேபாள வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிய தமிழர்கள் உறவினர்களை கண்டு கண்ணீர் விட்டனர்.
