கரூர் அருகே 240 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் காரில் சென்றுள்ளார் காரை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கர்ணாராம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து மொத்தம் 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 928 ரூபாய் என கூறப்படுகிறது.
மேலும், புகையிலைப் பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
