Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு… திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நன்றி அறிவிப்பு மாநாடு…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாட்டில் அமைச்சர் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 243 அரசாணை வெளியிட்டதற்காகவும், ஆய்வக உதவியாளர் பணி விதிமுறைகள் வெளியிட்டதற்காகவும், பகுதி

நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 உயர்த்தி வழங்கியதற்காகவும் இந்த நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள் இந்த நிகழ்வில் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!