Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமியை ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் ஓட்டல் உரிமையாளரிடம் விற்று, 5 நாட்களில் 30க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமான 13 வயது சிறுமியை போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அந்த சிறுமி மீட்கப்பட்ட நிலையில், இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,

‘கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு மாயமான சிறுமியை, ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் ஓட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்றுள்ளார். அங்கிருந்து பல ஓட்டல்களுக்கு அந்த சிறுமி கொண்டு செல்லப்பட்டு, 5 நாட்களில் 30க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் கொடுமையின் போது, சிறுமிக்கு மது அருந்த கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தை மறைக்க சில ஓட்டல் உரிமையாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் தொடர் விசாரணைக்கு பின்னர், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றோம். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றனர்.

ஸ்ரீகங்காநகர் சுற்றுலா தலம் அல்லாத போதிலும், அங்கு 150க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஓட்டல்கள் செயல்பட்டு வருவது இந்த பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சட்டவிரோத ஓட்டல்களை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!