Skip to content
Home » கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் கடந்த வருடம் ஜனவரி 2022 அன்று ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி முதலீட்டு நிறுவனம் அர்ஜூன் கார்த்திக் என்பவரால் தொடங்கப்பட்துள்ளது. அதில் பங்குதாரராக விக்னேஷ் மாஜினி மற்றும் கணக்கு மேலாளராக எவாஞ்சலின் அவினா தெராஸ் என்பவர் இருந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த நபர்களிடம் முதலீடு திட்டம் சம்பந்தமாக தகவல் தெரிவித்து, ஆசை வார்த்தைகளை கூறி கவர்ச்சிகரமான திட்டத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு லட்சம் முதலீடு தொகை செலுத்தினால் 18 மாதங்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேலும் 24 மாதங்கள் திட்டத்தில் மாதம் பத்தாயிரம் மற்றும் ஒரு கிராம் தங்க நாணயம் பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டு லட்சம் திட்டத்தின் கீழ் 5 வருடத்திற்கு பிறகு மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் உள்ளிட்ட

பல்வேறு திட்டங்களின் பேரில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் லட்சுமாங்குடி பூதமங்கலம், பொதக்குடி, அத்திக்கடை மற்றும் லாங்குடி அதன் சுற்று வட்டார ஊர்களை சேர்ந்த மக்கள் மட்டும் சுமார் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் முதலீடாக வழங்கி உள்ளனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி இன்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனர் அர்ஜுன் கார்த்திக் என்பவர் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமாக எங்களை ஏமாற்றி உள்ளார். எங்களுடைய பணத்தை திருப்பி தர மறுப்பதாகவும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பணமும் எங்களுக்கு கொடுக்கவில்லை இதனை கேட்டால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார். 300 கோடி ரூபாய்க்கு மேல் அவரிடம் பணத்தை முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாந்துள்ளனர்.

பணத்தை அளித்து ஏமாந்தவர்களிடம் ஒரு சில நபர்கள் பற்றி குற்றம் கூறி பணத்தை திருப்பித் தருவதாக வீடியோ வெளியிட்டு பண முதலீட்டார்கள் இடையே மோதலை உண்டு செய்யும் சூழ்ச்சியை கையாளுகிறார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!