Skip to content
Home » 5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

  • by Senthil

கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம்,தென்னிந்திய அளவில்,நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் வாடிக்கையாளர்களின் ,பெரும் வரவேற்பை பெற்று இயங்கி வருகிறது… நடுத்தர வகை கார்கள் முதல் உயர் ரக சொகுசு கார்கள் வரை அனைத்து வகையான கார்களை பராமரிப்பதில் முன்னனி நிறுவனமான 5 கே கார் கேர் 32 இலட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.. இந்நிலையில் .கார்கள் பராமரிப்பதில் வீல் அலைண்ட்மெண்ட்,செராமிக் என ஒரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளும் கொண்ட பிரத்யேக 5 கே கார் கேர் மைய துவக்க விழா கோவை கணபதி பகுதியில் உள்ள கே.ஆர்.ஜி.நகரில் நடைபெற்றது.

புதிய கிளையின் உரிமையாளர்கள் அருள் கார்த்திகேயன், செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக 5 கே கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் சின்னராஜ் கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார்.தொடர்ந்து,செய்தியாளர்களிடம் கிளை உரிமையாளர்கள்

மற்றும் கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் பேசினர் ,கார்கள் பராமரிப்பில் கார் டீடெயிலிங் எனும் பணியை எங்களது நிறுவனம் சிறப்பாக செய்து வருவதாகவும்,ஒவ வொரு கிளை திறப்பின் போதும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் விதமாக புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவதாக கூறிய அவர், தற்போது ஆண்டு முழுவதும் கார்களை பராமரிப்பு செய்வதற்கான ஏ.எம்.சி.திட்டத்தை துவக்கி உள்ளதாகவும், இதன் வாயிலாக 5 கே கார் கேர் நிறுவனத்தின் எல்லா நிறுவனங்களிலும் சேவைகளை பெற முடியும் என தெரிவித்தனர்.

சாலை விபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் சைக்கிள் பேரணி நடத்தி வருவதாகவும், தமிழக காவல் துறையுடன் இணைந்து,வாகன ஓட்டிகள் சீட் பெல்ட்,மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் போன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை 5 கே கார் கேர் தொடர்ந்து செய்து வருவதாக குறிப்பிட்டார்.மேலும் கணபதி பகுதியில் துவங்கியுள்ள புதிய கிளை துவக்க விழாவை முன்னிட்டு ஏராளமான புதிய சலுகைகள் வழங்க உள்ளதாக கிளை உரிமையாளர்கள் தெரிவித்தனர்..விழாவில் 5 கே கார் கேர் நிறுவன அனைத்து நிலை ஊழியர்கள்,பல்வேறு கிளை உரிமையாளர்கள் ,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!