கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பதை சார்ந்த 5 பேர் கிணற்றில் உடலை ஒருவருக்கு ஒருவர் கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை – உடலை மீட்டு போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த நிலையில் இன்று உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டு கொங்கு நகரில் வசிப்பவர் ராமசாமி (வயது 63). இவர் டைல்ஸ் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் நெரூரை அடுத்த சின்னகாளிபாளையம் கிராமத்தில் ஐந்தரை ஏக்கர் உள்ளது.
இவருக்கு ஜானகி என்ற மனைவியும், சுகுணா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
மகள் சுகுணாவிற்கு பிரபு என்பவரை திருமணம் செய்து கொடுத்து அவர்கள் வேலாயுதம்பாளையத்தில் வசித்து வருகின்றனர்.
மகளுக்கு சிவானி என்கின்ற 10 வயது மகளும் அதிரன் என்கின்ற 4 வயது மகனும் உள்ளனர்.
மகளுக்கும், மருமகனுக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15ம் தேதி முதல் ராமசாமி வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக தங்களுடைய தோட்டத்துக்கு வீட்டுக்கு கால் டாக்ஸி புக் செய்து மனைவி மகள் பேரக் குழந்தைகளுடன் வந்துள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் அருகில் உள்ள தோட்டத்துக்காரர் இவர்கள் 5 பேரும் உடலில் ஒருவருக்கு ஒருவர் புடவையால் கட்டப்பட்டு கிணற்று தண்ணீரில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த வாங்கல் காவல் நிலைய போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஐந்து பேரின் உடலை ஒவ்வொன்றாக மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உடலை மீட்டபோது ராமசாமி அவரது பேத்தி சிவானி, மகள் சுகுணா தனது மகன் அதிரன் மற்றும் தாய் ஜானகி உடலில் சேலை துணியால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியும் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் ரகுபதி விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 5 பேரின் ஒவ்வொன்றாக மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று உடற்கூறு ஆய்வு பின்னர் பாலமாபுரம் பகுதியில் உள்ள மின்சார சுடுகாட்டிற்கு அவர்கள் உடலை தகனம் செய்ய உறவினர்கள் எடுத்து எடுத்துச் சென்றனர்.
மேலும் போலீசார் விசாரணையில் ராமசாமியின் வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வந்துள்ளனர் அந்த கடிதத்தில் தனது மருமகன் மது போதைக்கு அடிமையாகி மகளை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார் இதனால் மனவேதனையில் இருந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
