Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 பேர் கைது

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 நபர்களை போலீசார் கைது செய்து விசாரனை.

கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியில் போலீசார் வாகன இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் அதில் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாரை பார்த்த அந்த கும்பல் இறங்கி தப்பி ஓட முயன்றனர்.

போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் சோழபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் , காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சச்சின் (29),
ராமமூர்த்தி,ராஜா (35) மானம்பாடியை சேர்ந்த முருகன் (30) என்பதும் விசாரணையில் தெரிய வரவே போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் நேற்று மது போதையில் சோழபுரத்தைச் சேர்ந்த அன்சாரிக்கும், விளந்த கண்டம் பகுதியைச் சேர்ந்த சக்திவேலுக்கு ம் தகராறு ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் , அன்சாரி வீட்டிற்கு சென்று சக்திவேல் தனது நண்பருடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அன்சாரியின் தந்தை அபூபக்கர் சித்திக் என்பவர் சோழபுரம் காவல் நிலையத்தில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து அன்சாரியின் தந்தை அபூபக்கர் சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் அந்த காரில் பயணிப்பது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் அந்த காரை விரட்டி சோழபுரம் புறவழிச் சாலையில் பிடித்தனர் . இதனை தொடர்ந்து பிடிபட்ட ஐந்து நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!