Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து 50,000 நெல் மூட்டைகள் சேதம்

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து 50,000 நெல் மூட்டைகள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. பட்டீஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் விவசாயிகள் மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பதில் நிலவும் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கும்பகோணம் வட்டத்தில் உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல் சேமிப்பு கிடங்கிற்கு கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 50,000 நெல் மூட்டைகள் கிடங்கு வளாகத்திற்குள் திறந்த வெளியில், வானம் பார்த்த பூமியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இப்பகுதியில் திடீரெனப் பெய்த பலத்த மழையால் இந்த மூட்டைகள் அனைத்தும் நனைந்து, நெல்மணிகள் முளைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மழையிலிருந்து நெல்லைப் பாதுகாக்கக் குறைந்தபட்சம் அவசியமான தார்ப்பாய்கள் கூட அங்கு இல்லாததால் இந்த ஒட்டுமொத்த இழப்பும் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!