திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அரசுக்கு சொந்தமான காட்டு நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி மலைவாழ் மக்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களை மிரட்டி, ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்றதாக 3 வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர் 6 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
6 அதிகாரிகள் சஸ்பெண்ட் – பட்டா மோசடியில் அதிரடி நடவடிக்கை
