Skip to content
Home » 600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Senthil

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற தமிழக முதலமைச்சர் அனைத்து மாநகராட்சியை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கவும் அறிவுறுத்தி இருந்தார்.அந்த வகையில் கோவை மாநகராட்சியில் தூய்மை இயக்கம் திட்டத்தை துவக்கி மாதத்திற்கு இரண்டு முறை தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என கிளீன் டச் நிறுவனத்துடன் மாநகராட்சி இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி

ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன்,மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தூய்மை பணியை துவக்கி வைத்தனர்.இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் கோவையில் உள்ள ஆறு முக்கிய பேருந்துகளை 600 கல்லூரி மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.இவர்களது இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.தொடர்ந்து மக்கள் தங்களுடைய நகரமாக நினைத்து தூய்மையாக வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!