Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர். தொடர்ந்து

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 66 பயனாளிகளுக்கு 2கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!