திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விழுப்புரம் போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் நவ.22 முதல் 25 வரை 4 நாட்களுக்கு 8,012 சிறப்பு பேருந்து நடைகள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்துத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மண்டலங்களிலிருந்து இப்பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து இயக்கப்படும் இச்சிறப்பு சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி 8012 சிறப்பு பஸ்கள் இயக்கம்
