Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள், மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு சுமார் 297 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

அதில் ஒரு படகில் இருந்த 9 தமிழக மீனவர்களே தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் கச்சத்தீவு – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த மீனவர்கள், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் தமிழக மீனவர்கள் கடலுக்கு கண்டு செல்லும் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கும் நடவடிக்கையிலும் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

error: Content is protected !!