பிரிட்டனை சேர்ந்த 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற முதியவர், பறக்கும் விமானத்தின் இறக்கை மீது நின்றபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தனது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கண்ட இந்த மெய்சிலிர்க்க வைக்கும்


சாகச பயண காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றன. இவர் நிகழ்த்திய இந்த அசாத்திய சாதனைக்கு சர்வதேச அளவில் பாராட்டு குவிந்து வருகின்றன.
