Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோதண்டபாணி வரவேற்றார். பாரதி புத்தகாலயத்தை தஞ்சை எம்பி எஸ் எஸ் பள்ளி மாணிக்கம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், சி பி ஐ எம் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், ஐயூ எம் எல் மாவட்ட செயலாளர் ஜெயினுல்ஆபுதீன், கலை பண்பாட்டு துறை முன்னாள் இயக்குனர் குணசேகரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில செயலாளர் செந்தில்குமார், செல்வராஜ், களப்பிரன், விஜயகுமார், தஞ்சை மறை மாவட்ட கவுன்சிலர் சக்கரியாஸ், இந்திய தேச காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ் வழி கல்வி இயக்கம் இளமுருகன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குருசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!