Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

தஞ்சை – திருச்சி மெயின் சாலையில் உள்ள தஞ்சை ரயில் நிலையம் பின்புறம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த முதியவரின் பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அந்த முதியவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!