Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துரை தயாநிதி உடல்நிலை….. முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரித்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக  வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டார்.  மூளையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யும்  சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று  துரை தயாநிதியை பார்த்து நலம் விசாரித்தார். சுமார் 30 நிமிடம் அங்கு இருந்து  துரை தயாரிநிதியை பார்த்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும்  மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  அப்போது அங்கிருந்த    மு.க. அழகிரியிடமும், துரை தயாநிதி  உடல்நிலை குறித்து கேட்டார். பின்னர்  முதல்வர் சென்னை  தி்ரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!