வட கிழககு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து
மாநகராட்சி மேயர் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு.
இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிக அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படக்கூடிய சூழ்நிலையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் அதற்கு தேவையான உபகரணங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பது குறித்து தஞ்சை மாநகராட்சி மேயர் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர் அப்போது மரம் வெட்டும் கருவி கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாகனங்கள் மணல் மூட்டைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் உடனடியாக மருத்துவ குழுக்களை அனுப்பி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பதற்கு மேலும் காய்ச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் அவர்களை கண்காணிக்கவும் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காற்று அதிகமாக வரும் பட்சத்தில் மரக்கிளைகள் மின் ஒயர்கள் மீது சாயாமல் இருப்பதற்காகச முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த கூடிய பணியும் கழிவுநீர் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கக் கூடிய பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்களான சாமந்தான் குளம், அய்யன் குளம் உள்ளிட்ட குளங்களில் தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் குளங்களின் நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய்கள் என அனைத்து கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எத்தனை கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டது என்ற விவரம் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.
தஞ்சாவூர் டெல்டா பகுதி என்பதால் ஏற்கனவே பல ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சீரமைக்க வேண்டிய சில நீர்நிலைகளில் நாகைக்குட்டை மற்றும் வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து அடுத்த கட்டமாக சீரமைக்க மேயர் அவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது
தற்போது கிராண்ட் அணைக்கட் கால்வாயில் நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை கூட்டத்தில் நீர்வரத்தை பொறுத்து முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ காரணமாக கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், மேக வெடிப்பு போன்ற அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை பணிக்காக ஜேசிபி, ஹிட்டாச்சி, மரம் அறுக்கும் இயந்திரங்கள், பவர் சா, பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்த வாகனங்களை சரிசெய்யவும், புதிய வாகனங்கள் வாங்கவும் SDRF நிதியில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
