Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் 11 வயதிற்குட்பட்ட சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போக்சோவின் கீழ் மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இதனை தொடர்ந்து மோகனை குண்டாசில் கைது செய்து அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா குற்றவாளியான மோகனை குண்டாசின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!